அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா, கடந்த 25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், மாரடோனா புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மாரடோனாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வின்போது கலந்துகொண்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகையில், ‘‘மாரடோனா உலகளவில் அறியப்பட்டவர். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்றோரின் கருத்துகளைப் பின்தொடர்ந்தவர்.
தனது வாழ்விலும் அவற்றைப் கடைப்பிடித்தார். அதேநேரம், உலக சமாதான விரும்பியாகவும் அவர் காணப்பட்டதால், அனைவராலும் மாரடோனா ஏற்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 48 பந்துகளில் 86 ரன்கள்.. ஒற்றை ஆளாய் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பேர்ஸ்டோவ்