ETV Bharat / state

ரயில் கொள்ளையர்களிடம் தங்க நகைகள் பறிமுதல் - தங்க நகைகள்

ஈரோடு: ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து மீட்டு ரயில்வே காவல்துறையினர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

தங்க நகைகள் பறிமுதல்
author img

By

Published : Jun 12, 2019, 7:36 PM IST

ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு செல்லும் விரைவு ரயில்களில் சமீப காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சேலம் - ஈரோடு இடையிலான வழித்தடத்தில் அதிகளவு கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக பயணிகள் புகார் அளித்த வண்ணம் இருந்தனர். புகார்களின் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் சிறப்பு படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த வடமாநில கும்பல் ஒன்றை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அனைவரும் ரயிலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பிலான 54 சவரன் தங்க நகை, 49 செல்போன்கள், இரண்டு லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகை, செல்போன்கள்

இதையடுத்து இன்று கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரயில்வே துணை காவல் தலைவர் கே. பாலகிருஷ்ணன் கொள்ளை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு காவல் படையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

ஈரோடு  12.06.19                                                சதாசிவம்
                           
ஈரோட்டில் இருந்து மாவேலிபாளையம் வரை ரயிலில் செல்லும் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட 15லட்சம் ரூபாய் மதிப்பிலான 54சவரன் தங்க நகைகள் மற்றும் 49செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது...                                                                      
ஈரோடு-சேலம்- கோவை மார்க்கமாக செல்லும் விரைவு ரயில்களில் சமீப காலமாக வழிபறி  கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.குறிப்பாக சேலம் ஈரோடு இடையேயான வழித்தடத்தில் அடுத்தடுத்து இரு தினங்களில் விரைவு ரயில்களில்  கொள்ளையர்கள்  பெண் பயணிகளிடம் இருந்து நகைகளை பறித்து சென்றனர்.  சேலம் - ஈரோடு அருகே மாவேலிபாளையம்  இரும்பு பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் அந்த இடத்தில் ரயில் மெதுவாக சென்றதை பயன்படுத்தி ரயில் கொள்ளையர்கள் பயணிகளிடம் நகைகளை பறித்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றனர்..இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் தனிப்படை அமைத்து  குற்றவாளிகளை தேடி வந்தனர் இந்நிலையில் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் பிடிபட்டனர்.. அவர்களிடமிருந்து நகை செல்போன் லேப்டாப்புகள் மீட்கப்பட்டன.. இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் இன்று நடைபெற்றது.
 கொள்ளையரிடமிருந்து போலீசாரால் மீட்கப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 54 சவரன் தங்க நகைகள்,  49 செல்போன்கள் இரண்டு லேப்டாப்புகளை ரயில்வே காவல்துறை துணை தலைவர் பாலகிருஷ்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்..மேலும் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து  நகைகளை மீட்ட போலீசாருக்கு அவர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
 பேட்டி..பாலகிருஷ்ணன்..ரயில்வே காவல்துறை துணை தலைவர்..

 Visual send mojo app
FILE NAME:TN_ERD_02_12_POLICE_RECOVERY_VISUAL_7204339

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.