ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கரட்டடிபாளையத்தில் செயல்பட்டு வரும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சசர் செங்கோட்டையன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”சாலை பாதுகாப்பு வாரவிழா என்பது சாலைகளில் விபத்துக்களை குறைப்பதற்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுவருகிறது.
மாணவ - மாணவிகள் சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது என்றார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நான்கு வழிச்சாலைகள், ஆறு வழிச்சாலைகள் என தமிழ்நாட்டில் முதலமைச்சர் நிறைவேற்றி காட்டியுள்ளார்.
10 நாள்களுக்கு முன்பு விபத்துக்கள் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் விருது பெற்றுள்ளார். இந்தியாவில் வாகன எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதில், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு இருசக்கர வாகனங்கள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சாலைகளை விரிவுபடுத்தவும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
நீட் தேர்விற்கு கடந்தாண்டைவிட இந்தாண்டு 17 விழுக்காடு குறைவான விண்ணப்பத்திற்கு காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்தான் பதிலிளிப்பார். அவர்தான் மருத்துவம் சார்ந்த துறைகளை மேற்கொண்டுவருகிறார் என்றார்.
இந்து முறைப்படி மீண்டும் திருமணம் - எல்லைகளைத் தாண்டிய காதல் கதைஇதையும் படிங்க: