ETV Bharat / state

தேர்தல் ஆணையத்துடன் கூட்டு வைத்து எதிர்க்கட்சிகளை வஞ்சிக்கிறது பாஜக

ஈரோடு: பாஜகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், வருமானவரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்துடன் கூட்டு வைத்து எதிர்க்கட்சிகளை வஞ்சித்து வருகிறது என மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்துள்ளார்.

jawagirulla-press-conf
author img

By

Published : Apr 7, 2019, 10:59 PM IST

தமிழ்நாட்டில் மக்களவைத்தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியின் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து நடைபெற்றப் பொதுக்கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டார். கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மோடி தனது ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பதில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி பற்றிய குற்றச்சாட்டுகளே அவரது பரப்புரையில் அதிகமாக இடம்பெறுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பரப்புரையில் இந்தியா வளர்ச்சி பெறுவதற்கான திட்டங்கள் அதிகமாக உள்ளது. பாஜகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றுடன் கூட்டு வைத்து எதிர்கட்சிகளை வஞ்சித்து வருகிறது என விமர்சித்தார்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

மேலும், தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்கள், வாக்காளர்களை பண வெள்ளத்தில் நனைய வைத்து வருகிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி தினந்தோறும் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். திமுக கூட்டணியில் தற்போது போட்டியிட இடம் ஒதுக்கப்படவில்லை என்றாலும், நாட்டு நலனே முக்கியம் என்பதால் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

ஈரோடு 07.04.2019
சதாசிவம்

பா.ஜ.க விற்கு தோல்வி பயம் ஏற்பட்டு உள்ளதாகவும் , அதனால் வருமான வரி துறை  , தேர்தல் ஆணையத்துடன் கூட்டு வைத்து கொண்டு எதிர்க்கட்சிகளை வஞ்சிப்பதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஈரோட்டில் பேட்டி ..

ஈரோடு  நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்,
ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி அவர்களை ஆதரித்து,
மனிதநேய மக்கள் கட்சி  சார்பின்  மாநில தலைவர் பேராசிரியர்,முனைவர் ஜவாஹிருல்லா பொதுகூட்டத்திற்கு வந்தார்.முன்னதாக ஈரோட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா , 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க பிரதம வேட்பாளர் மோடி , வளர்ச்சி என்று   பரப்புரை செய்தார் என்றும் ஆனால் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா வளர்ச்சி  பெறவில்லை என்றார். ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற அறிவித்த மோடி , தற்போது இந்தியாவில்  உழைக்கும் மக்களில் 50 சதவிதம் பேருக்கு வேலை இல்லை என்றார்.தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா , தற்போது மோடி தனது ஆட்சியின் சாதனைகளை சொல்லி  வாக்கு கேட்பதில்லை என்றும் , ராகுல் பிரச்சாரத்தில் வளர்ச்சியின் பாதையில் நாட்டை எடுத்துச்செல்வது குறித்தே பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவித்தார்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு நல்ல  திட்டங்கள் உள்ளதாக தெரிவித்த ஜவாஹிருல்லா கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவோம்என்றும் ,  நிதிஆயோக்  ஒழிக் கப்பட்டு மீண்டும் திட்ட கமிஷன் கொண்டு வரும் காங்கிரஸ் என கூறி இருப்பது வரவேற்றத்தக்கது  என்றார். மக்களின் கோரிக்கையை முழுவதுமாக எடப்பாடி அரசு புறக்கணிக்கப்பதாகவும் , அதிமுக - பா.ஜ.க கூட்டணி தினந்தோறும் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருவதாகவும் தெரிவித்த ஜவாஹிருல்லா 
தமிழகத்திலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏதிர்ப்பார்பதாகவும் , 18 இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நாடு முழுவதும் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதலிளித்த ஜவாஹிருல்லா , நாடு முழுவதும் பா.ஜ.க விற்கு தோல்வி பயம் ஏற்பட்டு உள்ளதாகவும் , அதனால் வருமான வரி துறை  , தேர்தல் ஆணையத்துடன் கூட்டு வைத்து கொண்டு எதிர்க்கட்சிகளை வஞ்சிப்பதாக தெரிவித்தார்.தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களை பணம் வெள்ளத்தில்  நனைய வைப்பதாகவும் , அவர்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை என்றார்.தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக பயன்படுத்தி வருவதாகவும் , பா.ஜ.க வை மக்கள் வாக்கு சீட்டு மூலம் வீழ்த்துவார்கள் என்றார்.ராகுல் அமேதி மற்றும் வயநாடு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவர் என்றும் , தங்களுக்கு திமுக கூட்டணியில் தற்போது போட்டியிட இடம் ஒதுக்கப்படவில்லை என்றாலும் ,நாட்டு நலனே முக்கியம் என்பதால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்றார்.
கருத்து கணிப்புகளை தவறு என்றோ , சரி என்றோ கூற முடியாது என்று தெரிவித்த ஜவாஹிருல்லா , கருத்து கணிப்புகள் மக்களின் மனநிலையை பிரதிபலிக்குமா என்பது கேள்விக்குறி தான் என்றார்... 

பேட்டி : ஜவாஹிருல்லா - மாநிலத்தலைவர்
மனித நேய மக்கள் கட்சி

Visual send ftp
File name: 

TN_ERD_04_07_JAWAGIRULLA_PRESS_MEET_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.