ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 74.79% வாக்குகள் பதிவு; முழு நிலவரம்! - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேரலை

இடைத் தேர்தல்
இடைத் தேர்தல்
author img

By

Published : Feb 27, 2023, 8:07 AM IST

Updated : Feb 27, 2023, 10:22 PM IST

22:09 February 27

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 74.79% வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.79% மொத்த வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2021 பொதுத்தேர்தலில் இங்கு 66.24% வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 238 வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குகள், பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன. வரும் மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன

17:28 February 27

5 மணி நிலவரப்படி 70.58% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

15:52 February 27

59.28% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

13:27 February 27

ஆதார் அட்டை காட்டி வாக்களிக்கலாம் - சத்யபிரதா சாகு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதார் அட்டையை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தகவல்.

13:22 February 27

1 மணிவரை 44.56% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீத வாக்குகள் பதிவு; ஆண்கள் 49,740, பெண்கள் 51,649 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர்.

12:29 February 27

மை காயும் முன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா!

ஈரோடு கிழக்கு தொகுதி அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வாக்குக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை அரசியல் கட்சியினர் பணம் வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

12:24 February 27

வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுவதாக அதிமுக குற்றச்சாட்டு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுவதாகவும், பணப்பட்டுவாடா நடப்பதாக கூறி அதிமுக - திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம். தள்ளு முள்ளுவில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைத்தனர்.

11:35 February 27

தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு!

மாநில தேர்தல் அணையத்தில் இருந்து கொண்டு வாக்குப்பதிவு மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா மூலம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு ஆய்வு செய்தார்.

11:34 February 27

ஈரோடு கிழக்கு தொகுதி 11 மணி நிலவரம் - 63,469 பேர் வாக்களிப்பு!

காலை 11 மணி நிலவரப்படி 63 ஆயிரத்து 469 பேர் வாக்களித்துள்ளனர். ஆண்கள் 32 ஆயிரத்து 562 பேர், பெண்கள் 30 ஆயிரத்து 907 பேர் வாக்களித்து உள்ளனர் - தேர்தல் ஆணையம்

11:30 February 27

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் - காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்

11:13 February 27

178வது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

ஈரோடு பிரப் ரோடு வாக்குப்பதிவு மையத்தில் ஒரு வாக்குச் சாவடியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு செலுத்தினால் கை சின்னத்தில் லைட் எரிவதாக அதிமுகவினர் புகார் மனு அளித்து உள்ளனர். அதிமுகவினர் புகாரை தொடர்ந்து 178-வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்தம்.

11:06 February 27

வீரப்பன் சத்திரம் பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தமா?

ஈரோடு கிழக்கு தொகுதி வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 45வது வாக்குச்சாவடியில் எந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

11:02 February 27

வாக்குச்சாவடிக்குள் முகவர்களிடையே வாக்குவாதம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், பெரியண்ணா வீதி வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர்களின் முகவர்களுக்கு இடயே வாக்குவாதம். பொது மக்கள் வாக்களிப்பதை முகவர் பார்த்ததாக குற்றச்சாட்டு.

10:45 February 27

ஈரோடு அரசியல் நாகரிகமானது - அதிமுக வேட்பாளர் தென்னரசு!

திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுமே தகராறு, வம்புகளில் ஈடுபட மாட்டோம். ஈரோடு அரசியல் நாகரிகமானது அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. என அதிமுக வேட்பாளர் தென்னரசு கருத்து.

10:41 February 27

கருங்கல்பாளையம் வாக்குவச்சாவடியில் ஐ.ஜி ஆய்வு!

ஈரோடு கருங்கல்பாளையம் வாக்குச்சாவடியில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ஆய்வு செய்தார். பதற்றமான வாக்குச்சாவடி எனக் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐ.ஜி சுதாகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

10:39 February 27

ஆதாரை ஆவணமாக ஏற்பதற்கு மறுப்பு ஏன்?

ஈரோடு கச்சேரி வீதி வாக்குச்சாவடியில் ஆதாரை ஆவணமாக ஏற்க மறுத்தது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக கேள்வி.

10:32 February 27

பணப்பட்டுவாடா நடப்பதாக அதிமுக புகார்!

இடையன்காட்டுவலசு பகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் அதிமுக புகார். வாக்குச்சாவடி எண் 138 மற்றும் 139 ஆகிய இடங்களில் குறிப்பிட்ட கட்சியினர் பணம் வழங்குவதாக மின்னஞ்சல் மூலம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

10:28 February 27

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

09:54 February 27

மை வைக்காமல் வாக்களித்த பெண்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் விரலில் மை வைக்காமல் பெண் வாக்களித்து சென்ற பெண்னை அழைத்து தேர்தல் அலுவலர்கள் மை வைத்து அனுப்பினர்

07:49 February 27

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேரலை!

9:45 AM, 27 FEB

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீத வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் அதில் 12 ஆயிரத்து 679 பேர் ஆண் வாக்காளர்கள் என்றும் 10 ஆயிரத்து 294 பேர் பெண் வாக்காளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 973 பேர் வாக்களித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9:42 AM, 27 FEB

ஈரோடு கருங்கல்பாளையம் கல்லுபிள்ளையார் கோயில் வாக்குச் சாவடியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களித்தார்.

9:39 AM, 27 FEB

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களித்தார்.

9:25 AM, 27 FEB

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வரிசையில் நின்று வாக்களிக்கிறார்.

9:19 AM, 27 FEB

ஈரோடு கிழக்கு தொகுதி பெரியார் நகர் வாக்குச் சாவடி அருகே நின்று வாக்கு சேகரிப்பது தொடர்பாக அதிமுக - திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்

9:15 AM, 27 FEB

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகள் பதிவுவாகி உள்ளது - தேர்தல் ஆணையம்

9:10 AM, 27 FEB

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 10.10% வாக்குப்பதிவு

9:06 AM, 27 FEB

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமிராக்கள் உதவியுடன் வாக்குச்சாவடி மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

9:00 AM, 27 FEB

பெரியார் நகரில் அதிமுக - திமுகவினர் இடையே வாக்குவாதம்.

8:59 AM, 27 FEB

அதிமுக புகாரை அடுத்து பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தகவல்.

8:59 AM, 27 FEB

வாக்கு மை அழிவதாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கு தீர்வு காணப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்.

8:55 AM, 27 FEB

கச்சேரி வீதி வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வாக்கினை செலுத்தினார்.

8:51 AM, 27 FEB

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாக்களித்தார்.

8:25 AM, 27 FEB

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வீல் சேரில் வந்து தனது ஜனநாயக கடையை ஆற்றிய மூதாட்டி.

8:06 AM, 27 FEB

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

7:55 AM, 27 FEB

வாக்காளர்கள் விரல்களில் வைக்கப்படும் மை அழிந்தால் தங்களிடம் புகாரளிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தகவல்.

7:51 AM, 27 FEB

வாக்காளர்கல் விரல்களில் வைக்கும் மை அழிவதாக புகார் எழுந்துள்ளது.

7:45 AM, 27 FEB

அக்ரஹாரம் மகளிர் பள்ளி வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் தான் வாக்களிக்க முடியும் என அலுவலர்கள் கூறியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையம் கூறிய 12 வித அடையாள அட்டைகளை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரினர்.

7:40 AM, 27 FEB

செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த், "தேர்தலில் எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எந்த வேலை இருந்தாலும் கூட தேர்தலில் வாக்களிப்பது என்பது மிக முக்கியம். மக்கள் நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை மீட்டு எடுக்கும் வேட்பாளர் யார்? என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

7:35 AM, 27 FEB

வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

7:33 AM, 27 FEB

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த் வாக்களித்தார்.

7:25 AM, 27 FEB

தேமுதிக வேட்பாலர் ஆனந்துக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்ரஹாரம் மதரஸா பள்ளியில் வாக்களிக்க வந்த ஆனந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் வாக்குப்பதிவு மையத்தை விட்டு வெளியேறினார்.

7:20 AM, 27 FEB

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சித் துண்டு அணிந்து வந்ததால் தேர்தல் அலுவலர்கள் அவர் வாக்களிக்க அனுமதி மறுத்தனர்.

7:20 AM, 27 FEB

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், "மாற்றத்துக்காக பெருமகிழ்ச்சியோடு மக்கள் வாக்களிக்க வரவேண்டும். தேர்தல் ஆணையத்தின் பணிகள் திருப்திகரமாக உள்ளது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். எனது வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. மக்கள் ஆர்வத்தை பார்த்து அதனை புரிந்து கொள்ள முடிகிறது" என்றார்

7:14 AM, 27 FEB

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் தேர்தலில் வாக்களித்தார்.

7:05 AM, 27 FEB

இடைத் தேர்தலில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

7.AM, 27 Feb

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் துவங்கியது.

Last Updated : Feb 27, 2023, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.