ETV Bharat / state

'அடுக்குமாடிக்கு No; தடுப்புச் சுவரே போதும்' - காவிரி கரையோர மக்கள் ஈரோடு ஆட்சியரிடம் மனு! - தடுப்புச் சுவரே போதும்

ஈரோட்டில் பவானி காவிரி கரையோர பொதுமக்கள் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம்; வெள்ளம் புகாமல் இருக்க தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 19, 2022, 8:09 PM IST

'அடுக்குமாடி வேண்டாம்; தடுப்புச் சுவரே போதும்' காவிரி கரையோர மக்கள் ஈரோடு ஆட்சியரிடம் மனு!

ஈரோடு மாவட்டம், பவானி காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பசுவேஸ்வரர் வீதி, கந்தன் பட்டறை, குப்ப நாயக்கன்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகள் அமைத்து பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், காவிரி ஆற்றில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, அப்பகுதியிலுள்ளவர்களின் வீடுகளை வெள்ளம் சூழ்கிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறது.

இதனிடையே இவ்வாறு பவானியில் காவிரிக் கரையோரத்தில் தங்கி உள்ளவர்களுக்கு, மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்து அந்த மக்களை வீடுகளை காலி செய்ய வைத்து பவானியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயிலம்பாடி அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தடுப்புச் சுவர் அமைக்கக் கோரிக்கை: இதற்கிடையே, பவானி நகரிலிருந்து அப்பகுதி வெகுதூரம் இருப்பதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாகவும் குழந்தைகளின் கல்வி மற்றும் மீன்பிடித் தொழில் ஆகியவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தாங்கள் வெள்ள நீர் வீடுகளுக்குள்ளே வராத வண்ணம் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்து தர மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று (டிச.19) மாவட்ட ஆட்சியரிடம் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இது தொடர்பாக மனு அளித்தனர்.

இதையும் படிங்க: நில மோசடி செய்ய முயற்சிக்கும் தாய், தங்கை - கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.