ஈரோட்டில் அனைத்து அரசியல் கட்சி, பொது அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அமமுக, தமிழ்ப் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
மேலும் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடத்துவது, 14ஆவது நாளாக நடைபெற்றுவரும் ஷாஹீன் பாக் போராட்டத்தில் நாள்தோறும் ஒரு அரசியல் கட்சியினர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானம் வலியுறுத்தப்பட்டது.
ஈரோட்டில் வரும் 16ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சி, பொதுநல அமைப்பு சார்பில் ஒருநாள் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
இதையும் படிங்க: கமல் ஹாசனை சந்தித்த இஸ்லாமிய தலைவர்கள்!