ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் தப்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் ஆகியவற்றை தேடி விளைநிலங்களுக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கர்நாடக வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை தமிழக எல்லையான அருள்வாடி கிராமத்தில் உள்ள வீரண்ணா என்பவர் வாழை தோட்டத்தில் புகுந்து உள்ளது.
இதனை கண்ட விவசாயிகள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திக்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது யானை அவர்களை மீண்டும் துரத்தியதால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
சுமார் நான்கு மணிநேர போராட்டத்திக்கு பிறகு யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. தப்போது, வனப்பகுதி முழுவதும் காய்ந்து கிடப்பதால் உணவு, தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகள் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிராமத்திற்குள் புகுந்த யானையின் உடல் மெலிந்து மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. இந்த யானையின் உடல்நிலையை பார்க்கும்போது வனத்தில் போதிய பசுந்தழைகள் இல்லாததை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.