ETV Bharat / state

அமாவாசையை முன்னிட்டு சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. - Bannari

Bannari Mariamman temple: அமாவாசை நாளான இன்று (டிச.12) சத்தியமங்கலம் அருகே உள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

Bannari Mariamman temple
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 5:02 PM IST

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

அந்த வகையில், அமாவாசை தினமான இன்று(டிச.12) காலை முதலே கோயிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்தது. திருக்கோயிலில் உள்ள குண்டத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உப்பு, மிளகு தூவி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பெண் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

மேலும், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து பண்ணாரி மாரியம்மனை வழிபட்டுச் சென்றனர். அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி மாரியம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பண்ணாரி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும், கோயில் வளாகத்தில் பஜனைக் குழுவினர் பக்தி பாடல்களைப் பாடினர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி பகுதிகளிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

முன்னதாக, ஆண்டுதோறும் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் இறங்குதல் விழா கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவையொட்டி தினந்தோறும் கோயிலில் அம்மன் புகழ் பாடும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இதையும் படிங்க: 40 வருடங்கள் மேலாக மக்கள் மனதை ஆளும் கருப்பு ஹீரோ, ஸ்டைல் சாம்ராட் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.