ETV Bharat / state

பெண் கழுத்தறுத்துக் கொலை! மண உறவைத் தாண்டிய காதலா? - women

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கடை பகுதியில் வீட்டிற்குள் பெண் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண உறவை தாண்டிய காதலால் பெண் கழுத்தறுத்து கொலை : போலீசார் அனுமானம்
author img

By

Published : Jul 21, 2019, 12:41 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி தேவி (45). இவர்களுக்கு துளசி என்ற மகளும், குமார் என்ற மகனும் உள்ளனர்.

மகள், மகன் இருவருக்கும் திருமணமாகிவிட்டதால் சுரேஷ் தனது மனைவி தேவியுடன் தனியாக மூலக்கடையில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில், கணவன் மனைவி இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் சுரேஷ் கடந்த சில ஆண்டுகளாக வீட்டிற்கு வராமல் கரும்பு வெட்டச் செல்லும் இடத்திலேயே தங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தேவி தனியாக வசித்துவந்ததோடு அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலைக்கும் செல்வார்.

இதனிடையே, நேற்று தேவியின் வீட்டுக் கதவு மூடப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மாலையில் வீட்டுக் கதவை திறந்து பார்த்தபோது தேவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வௌ்ளத்தில் இறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையிலான காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மண உறவைத் தாண்டிய காதலால் பெண் கழுத்தறுத்து கொலை

வீட்டிற்குள் மதுபாட்டில், பீடித்துண்டுகள் இருந்ததால் மண உறவைத் தாண்டிய காதல் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:tn_erd_01_sathy_lady_murder_vis_tn10009Body:tn_erd_01_sathy_lady_murder_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே வீட்டிற்குள் பெண் கழுத்தறுத்து கொலை. சத்தியமங்கலம் போலீசார் விசாரணை: கள்ளக்காதலில் கொலையா

சத்தியமங்கலம் அருகே வீட்டிற்குள் பெண் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கு தேவி( வயது 45) என்ற மனைவியும், துளசி என்ற மகளும், குமார் என்ற மகனும் உள்ளனர். மகள், மகன் இருவருக்கும் திருமணமாகிவிட்டாதால் சுரேஷ் தனது மனைவி தேவியுடன் மூலக்கடையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் சுரேஷ் கடந்த சில ஆண்டுகளாக வீட்டிற்கு வராமல் கரும்பு வெட்ட செல்லும் இடத்திலேயே தங்கி கொள்வதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக தேவி தனியாக வசித்து வந்ததோடு அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் தேவியின் வீடு கதவு சாத்தியிருந்தது. அக்கம்பக்கம் குடியிருந்த பொதுமக்கள் மாலை தேவியின் வீட்டு கதவை திறந்து பார்த்தபோது வீட்டிற்குள் தேவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வௌ;ளத்தில் இறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா தலைமையிலான போலீசார் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்குள் மதுபாட்டில் மற்றும் பீடித்துண்டுகள் இருந்ததால் கள்ளத்தொடர்பு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.