ETV Bharat / state

கோபி அருகே கல்லூரிப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 1:30 PM IST

Erode College Student Death: கோபிசெட்டிபாளையம் அருகே பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Erode College Student Death
கல்லூரி பேருந்து மோதியதில் மாணவி சுவர்ணா உயிரிழப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒத்தக்குதிரை பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜன.6) காலை வழக்கம்போல் கல்லூரி மாணவி சுவர்ணா தனது எலக்ட்ரிக் பைக்கில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து தனியார் இன்ஜினியரிங் கல்லூரி நோக்கி வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, கோபி அருகே உள்ள கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு, சாலையில் மாணவி சுவர்ணாவின் இருசக்கர வாகனத்துக்குப் பின்னால் வந்த தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று, மற்றொரு கல்லூரி வாகனத்தை இடது புறமாக முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளது.

அப்போது இடதுபுறத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மாணவி சுவர்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர், சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவி சுவர்ணாவின் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவி சுவர்ணா, அதே கல்லூரியில் பி.இ (BE) இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், இவர் கோபிசெட்டிப்பாளையம், ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள சுப்பிரமணியம் என்பவரின் மகள் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் விபத்து ஏற்படுத்திய கடம்பூரைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேருந்து ஓட்டுநர் ஸ்ரீராம் என்பவரை, விசாரணைக்காக போலீசார் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: நண்பரை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கு: வேலூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.