ETV Bharat / state

கோபிசெட்டிபாளையத்தில் கரோனா அச்சுறுத்தல்: வணிக நிறுவனங்கள் மூடல் - Closure of Corona Threat Business Companies in Gobichettipalayam

ஈரோடு: கரோனா வைரஸ் காரணமாக கோபி பகுதியில் வணிக நிறுவனங்கள் காலவரையின்றி மூட வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது.

வருவாய் அலுவலத்தில் கூட்டம்
வருவாய் அலுவலத்தில் கூட்டம்
author img

By

Published : Mar 18, 2020, 11:46 PM IST

சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பெரும் உயிர் சேதத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் கரோனா வைரசால், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில், மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி, சுற்றுலா தலங்கள், கோயில்கள், வணிக நிறுவனங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோபி பகுதியில் உள்ள நகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளை மூட வருவாய்த்துறை சார்பில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

வருவாய் அலுவலத்தில் கூட்டம்

இக்கூட்டத்தில் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கோபி பகுதியில் முதல்கட்டமாக 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உடனடியாக மூடப்பட்டது. இந்த நிறுவனங்கள் காலவரையின்றி, மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: துபாயிலிருந்து சென்னை வந்த 44 பேருக்கு கோவிட்-19 தொற்று அறிகுறி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.