ஈரோடு: பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி பிரதான கால்வாய் நேற்று(டிச.10) மாலை உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சுமார் 300 ஏக்கர் விளை நிலங்கள் மூழ்கின. மூலக்கரை, கதிரம்பட்டி, நஞ்சனாபுரம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் தாழ்வான பகுதிகளிலிருந்த குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. கூரப்பளையம் பிரிவு என்ற இடத்தில் விசைத்தறி கூடத்தைத் தண்ணீர் சூழ்ந்ததுடன் அதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களைத் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை