ETV Bharat / state

அரசு கேபிள் டிவிக்கு தடையின்றி சிக்னல் வழங்க கோரி கேபிள் ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Nov 23, 2022, 7:34 AM IST

அரசு கேபிள் டிவிக்கு தடையின்றி சிக்னல் வழங்க கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேபிள் ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கேபிள் டிவிக்கு தடையின்றி சிக்னல் வழங்க கோரி கேபிள் ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு கேபிள் டிவிக்கு தடையின்றி சிக்னல் வழங்க கோரி கேபிள் ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் இருந்த நிலையில் தற்போது 60 ஆயிரம் மட்டுமே உள்ளது. ஆனால் தற்போது 456 கேபிள் ஆப்ரேட்டர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் அரசு செட்டாப்பாக்ஸ் சிகனல் செயலிழந்து விட்டதாக கேபிள் ஆப்ரேட்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்களுக்கு தடையின்றி சிக்னல் வழங்க வேண்டும். ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேசனை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செட்டாப்பாக்ஸ் பெற்றுள்ள அனைத்து ஆப்ரேட்டர்கள், ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கேபிள் ஆப்ரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'சவூதி சென்ற தம்பியை மீட்டுத்தாங்க'; 10 ஆண்டுகளாக சகோதரிகளின் பாசப்போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.