ETV Bharat / state

சசிகலாவுக்கு எதிராக ஈரோட்டில் அதிமுக கண்டன தீர்மானம்

ஈரோடு: சசிகலாவுக்கு எதிராக ஈரோடு பெரியார்நகர் பகுதி அதிமுக சார்பில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்
சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்
author img

By

Published : Jun 19, 2021, 9:07 PM IST

ஈரோடு பெரியார் நகர் பகுதிகழக அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பகுதி கழக தலைவர் பெரியார் நகர் மனோகரன் தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ சிவசுப்ரமணியம், பூந்துறை பாது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா தற்போது கட்சி நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்துப் பேசிவருகிறார்.

*இதன் மூலமாக கட்சியை அபகரிக்க முயற்சி செய்வதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது,

*தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கழக வெற்றிக்காக பாடுபட்ட முன்னாள் முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வது,

* உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி கரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும்

என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பகுதி கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.