ETV Bharat / state

இ-பாஸ் தளர்வு - ஈரோட்டில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அகற்றம்!

ஈரோடு: இ-பாஸ் பெற தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன.

checkpost
checkpost
author img

By

Published : Aug 19, 2020, 5:23 AM IST

ஈரோட்டில் கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக வெளி மாநிலம், வெளிமாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைபவர்களை கண்காணிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

மேலும் விஜயமங்கலம், கருங்கல்பாளையம், நொய்யல், தாளவாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நிரந்தர சோதனைச் சாவடிகள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விண்ணப்பித்தவர் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் அனைவரும் இ-பாஸ் விண்ணப்பித்ததை காண்பித்தால் உடனடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விமான கட்டணங்களை குறைக்க பயணிகள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.