ETV Bharat / state

அமைச்சர் செங்கோட்டையன் வீடு முற்றுகை

author img

By

Published : Feb 2, 2020, 11:16 AM IST

Updated : Feb 2, 2020, 11:22 AM IST

ஈரோடு : 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

Adi Tamil peravai  Siege the Education Minister's House
பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி கல்வியமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட ஆதித்தமிழர் பேரவை !

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம் நடத்தினர்.

பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி செங்கோட்டையின் வீட்டை முற்றுகையிட்ட ஆதித்தமிழர் பேரவையினர்.

போராட்டத்தின் போது ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் ஆதியமான் கூறும்போது, ”இப்போது நடைபெறும் போராட்டம் வெறும் ஆரம்ப கட்டப்போராட்டம் மட்டுமே. 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யாமல் தொடர்ந்தால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்” என்றார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் - ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறப்பு

Intro:Body:tn_erd_01_sathy_education_mininster_vis_tn10009

பொதுத்தேர்வை ரத்துச்செய்யக்கோரி கல்விஅமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட ஆதிதமிழர் பேரவை

கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் இல்லத்தை 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதிதமிழர் பேரவையை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் பேருந்துநிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்..

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆதிதமிழர் பேரவை அறிவிப்பு செய்திருந்தது. அதன்அடிப்படையில் இன்று அமைச்சர் செங்கோட்டையின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க அமைச்சரின் வீட்டை சுற்றிலும் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆதிதமிழர் பேரவையின் நிறுவனத்தலைவர் அதியமான் தலைமையில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய ஆதித்தமிழர் பேரவை உறுப்பினர்கள் அமைச்சருக்கு எதிராகவும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரியும் குலக்கல்வித்திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிடசென்ற ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களை கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யாவிடில் தற்போது ஆரம்ப கட்டப்போராட்டம் மட்டுமே நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வு தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்துவதாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் ஆதியமான் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை வாகனத்தில் அழைத்துச்சென்று தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion:
Last Updated : Feb 2, 2020, 11:22 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.