ETV Bharat / state

'வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை' - வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்

தமிழ்நாடு வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை

author img

By

Published : Nov 27, 2022, 9:40 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள காராச்சிக்கொரையில் ரூ.7 கோடி செலவில் பழங்குடியினர் வாழ்க்கையை விவரிக்கும் வகையிலான அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவ. 26) அருங்காட்சியகத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். அப்போது அமைச்சரிடம் இந்த திட்டங்கள் குறித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான (பொறுப்பு) ராமசுப்பிரமணியன் விளக்கினார்.

தொடர்ந்து பல்வேறு பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை தத்துவமாக வடிவமைக்கப்பட்ட சிலைகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "முதன்முறையாக 7 வகை பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் அருங்காட்சியகம் பவானிசாகரில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இந்த இடம் பவானிசாகர் அணை கட்டுவதற்காக 20 ஏக்கர் பரப்பளவை ஏற்கனவே பொதுப்பணித்துறைக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது பொதுப்பணித்துறையினர் மீண்டும் வனத்துறையினருக்கு இந்த இடத்தை ஒப்படைத்துள்ளனர்.

இதில் தற்போது 12 ஏக்கர் பரப்பளவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய பணிகளை நிறைவு செய்ய இன்னும் ரூ.2 கோடி தேவைப்படும் என வனத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரிடம் எடுத்துக் கூறி வரும் நிதிநிலை அறிக்கையில் இந்தத் தொகையை ஒதுக்கி அருங்காட்சியக பணி முழுமையாக நிறைவு செய்யப்படும்.

தமிழ்நாடு முழுவதும் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் சம்பளத்தை ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தான் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டு அவர்கள் 10 ஆண்டு நிறைவு செய்தால் பணி உயர்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு தி.மு.க. ஆட்சி வந்தவுடன் ரூ.10 கோடி ஒதுக்கி இதுவரை அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீடு நிதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 'தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.