ஈரோட்டில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உச்ச நீதிமன்ற உத்தரவின் படி விபத்து இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் விதமாகக் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவான 125 டெசிபல் அளவுக்கு அதிகமான பட்டாசுகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கத் தகுதியில்லை; உயர்நீதிமன்றம் அதிரடி