ஈரோடு மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு, கூலித்தொழிலாளி ஒருவர் தனது வீட்டின் அருகே வசித்த 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார். இச்சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோறிடம் கூறியதையடுத்து, தொழிலாளி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு ஈரோடு மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று (மார்ச் 16) நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அப்போது நீதிபதி இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட கூலித்தொழிலாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலி ஆவணம் மூலம் வங்கி மோசடி - இளம்பெண் சிறையில் அடைப்பு