ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் பெங்களூரிலிருந்து இயந்திர உதிரி பாகங்களை ஏற்றி வந்த லாரி கோயம்புத்தூர் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக வந்துள்ளது. ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சாலையோர வனப்பகுதியில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:இடிந்து விழுந்த இலவச தொகுப்பு வீடு - மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதி