ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேள்ள புஞ்சைபுளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நேற்று (அக்.29) நடைபெற்றது.
இதில் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி திருப்பூர், கோவை மாவட்ட கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிலக்கடலை மூட்டைகளை, விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மொத்தம் 45 கிலோ எடையுள்ள 1,240 நிலக்கடலை மூட்டைகள் வந்தன. இதில் 900 மூட்டைகள் ஏலம் போனது. நிலக்கடலை காய்ந்தது முதல்தரம் 61 ரூபாய் முதல் 65 ரூபாய் வரையும், இரண்டாம் ரகம் 57 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையும் ஏலம் கூறப்பட்டு மொத்தம் 26 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வார ஏலத்தை விட நிலக்கடலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை கூடியது என விற்பனை கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.