திண்டுக்கல்: ஆத்தூர் அருகே பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (45). இவர் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட சேடப்பட்டியில் தங்கி கட்டடப் பணி செய்துவந்தார். இந்நிலையில் கட்டட வேலைக்குச் சென்ற பழனியம்மாள், மற்றொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தின் பின்புற இருக்கையில் அமர்ந்து வந்துகொண்டிருந்தார்.
இருசக்கர வாகனம் ஓட்டிவந்த நபர் நிலைதடுமாறியதில், பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இரு பெண்களும் கீழே விழுந்தனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து, போடி காமன்வாடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் பழனியம்மாளின் மீது ஏறி, இறங்கியது.
இதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் 1880 லிட்டர் விஷ சாராயம் கொட்டி அழிப்பு