திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்தவர்கள் செந்தில்மணி, ரஞ்சிதா தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் 30ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ரஞ்சிதா பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து ரஞ்சிதாவின் தந்தை முருகேசன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் எரியோடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் ரஞ்சிதாவுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இருவரும் வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கமலை சிவன் கோயிலுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ரஞ்சிதாவை பெட்ரோல் ஊற்றி எரித்து ராஜ்குமார் கொலை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது ராஜ்குமாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து திருமணத்திற்கு வற்புறுத்திய நபர் கைது