திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கரிக்காலி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் நிலம் வாங்கியுள்ளார். இவர் ஜூன் 26ஆம் தேதி பத்திரப்பதிவு செய்த பிறகு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கரிக்காலி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜை அனுகியுள்ளார்.
அப்போது துரைராஜ் ரூ. 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்து தரமுடியும் என நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனுப்பினர். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் துரைராஜிடம் பணம் கொடுக்கும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் .
மேலும், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜன், ரூபாதேவி, கீதா தலைமையிலான குழு கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் நடத்திவந்த தனியார் அலுவலகத்திற்கும் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.