ETV Bharat / state

அடுக்கத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது! - Two arrested for drinking illicit liquor

திண்டுக்கல்: அடுக்கம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளச்சாரயம்  கொடைக்கானல் கள்ளச்சாரயம்  மலைப்பகுதில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது!  மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர்  Kallasarayam  Kodaikanal Kallasarayam  Two arrested for drinking illicit liquor  Alcohol Enforcement Division Police
Kallasarayam
author img

By

Published : Apr 19, 2020, 7:26 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி (48), ஜோபின் (32). இவர்கள் இருவரும் இணைந்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் காய்ச்சி உள்ளனர். இது குறித்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், மதுவிலக்கு காவல் துறையினர் பழனிசாமி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சி கைது செய்யப்பட்டவர்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக ம‌துபானக்‌ க‌டைக‌ள் மூடப்பட்டுள்ளதால் கொடைக்கானல் மலைக் கிராமங்களில் இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக யூ டியூப் பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சிய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதேபோன்று ம‌துப்பிரிய‌ர்க‌ள்‌ செய‌ல்க‌ளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மதுபான குடோனில் மதுபாட்டில்கள் திருட்டு: இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.