ETV Bharat / state

கொடைக்கானலில் வாகன கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

author img

By

Published : Jul 29, 2023, 5:08 PM IST

சுற்றுலா தலமான கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல வாகன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாடகை வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல்: சுற்றுலா தலத்தில் வாகன கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

திண்டுக்கல்: சுற்றுலா தலங்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ள தலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைகானல் சுற்றுலா தலம். இங்கு வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வருகிறது.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தந்து பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர். குணா குகை, தூண்பாறை, பைன் மர காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். இந்த நிலையில் வனத்துறையிடம் சிறப்பு அனுமதி வாங்கி செல்லும் பகுதிகளில் ஒன்றாக பேரிஜம் ஏரி இருந்து வருகிறது.

இங்கு செல்வதற்கு வனத்துறையின் மூலம் சிறப்பு அனுமதி வாங்கி கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். இந்நிலையில் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல பயணிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் போது கட்டணத்தை உயர்த்துவதற்கு, உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள், வாடகை வாகன உரிமையாளர்கள் ஆகியோர்களை அழைத்து வனத்துறையினர் ஆலோசனை நடத்துவது வழக்கம்.

இதையும் படிங்க: வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையே சமநிலையை பராமரியுங்கள்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஆனால் தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேரிஜம் செல்வதற்கு ஆகஸ்ட் 2 முதல் கட்டணத்தை வனத்துறை உயர்த்த உள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் வெளியூரிலிருந்து வாடகைக்கு வாகனம் எடுத்து ஓட்டும் ஓட்டுநர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பெட்ரோல் டீசல் விளை உயர்த்தியதால் தங்களது வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கூறிய வாடகை வாகன ஓட்டுநர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதே போல் வனத்துறையும் சுற்றுலா தங்களில் கட்டணங்களை உயர்த்தினால் தாங்கள் பெரும் அவதிக்கு ஆளாக்கப்படுவதாக வாகன ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளிடமும் வாகன கட்டணம் உயர்த்தப்படும் சூழல் ஏற்படும். இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து விடும் எனவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கார்களுக்கு 300 ரூபாயாகவும், வேன்களுக்கு 600 ரூபாயாகவும் உயர்த்தி உள்ளனர். இதனை மறு பரிசீலனை செய்து முன்பு போல கார்களுக்கு 200, வேன்களுக்கு 300 ரூபாய் என நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: இலவச வீடு வழங்க லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்றத் தலைவர்? - மாற்றுத்திறனாளி தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.