காலிப்பணியிடங்கள்:
வழக்குப் பணியாளர் 1 & 2 – 5 பணியிடங்கள்
பாதுகாவலர் – 1
பல்நோக்கு உதவியாளர் – 1
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 30.11.2022 தேதியின்படி அதிகபட்ச வயது 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
வழக்குப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை சட்டம்/ சமுகப்பணி/ சமூகவியல்/ சமூக அறிவியல் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் பணிகளுக்கு 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
வழக்குப் பணியாளர் - ரூ.15,000
பாதுகாவலர் – ரூ.10,000
பல்நோக்கு உதவியாளர் – ரூ.6,400
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://dindigul.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.11.2022 க்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண் 88 (தரைத் தளம்), மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: சென்னையில் அரசு வேலைவாய்ப்பு..!