திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா, அய்யலூர் அருகே மணியக்காரன்பட்டியில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இதில், 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கன்வாடிக்கு புதுக்கட்டடம் கட்டப்பட்டு வருவதால் அருகில் உள்ள நாடக மேடையில் தற்காலிகமாக அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 28) இந்த அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வழங்கப்படவிருந்த, முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்களும், குழந்தைகளின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அழுகிய முட்டைகளைச் சமைத்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கவிருந்த அங்கன்வாடி பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைகள் யாரும் சாப்பிடாததால் அசம்பாவிதம் ஏதுவும் நடக்காமல் தடுக்கப்பட்டது. அய்யலூர் பகுதி முழுவதும் வழங்கப்பட்ட முட்டைகள் இவ்வாறு இருப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். அழுகிய முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வீடுகளை விற்று சுபாஷுக்கு நன்கொடை வழங்கிய தியாகி - இலவச பட்டா கேட்டு அலையும் வாரிசு