ETV Bharat / state

மலைப்பகுதிகளில் வீடுகட்ட நடைமுறையை எளிமைப்படுத்துக - ஹென்றி - மலைப்பகுதிகளில் வீடுகட்ட நடைமுறைை எளிமைப்படுத்துக

திண்டுக்கல்: மலைப்பகுதிகளில் வீடு கட்டுவதற்கு உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி கோரிக்கைவிடுத்தார்.

henry
henry
author img

By

Published : Oct 30, 2020, 8:38 PM IST

Updated : Oct 31, 2020, 6:12 AM IST

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு அரசு தற்போது பல்வேறு சிக்கலான நடைமுறைகளை பின்பற்றிவருகிறது. வீடு கட்டுவதற்கு அரசின் பல்வேறு துறைகளில் தடையில்லா சான்று பெற வேண்டியுள்ளது.

இப்படி பல்வேறு துறைகளில் அனுமதி பெறுவதற்கு மாதங்கள் பல ஆண்டுகளாகி விடுகிறது. இந்தச் சிக்கலான நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் தடையில்லா சான்று பெற்று அனுமதி பெறுவதற்கு தனி மென்பொருள் ஒன்றை உருவாக்கி அதன் வாயிலாக விண்ணப்பித்து அங்கீகாரம் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தார்.

Last Updated : Oct 31, 2020, 6:12 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.