திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கே.ஆர் கலையரங்கம் அமைந்துள்ளது.
இது 1980களில் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கலையரங்கத்தில் பல்வேறு திரைப்படம் திரையிடப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. நாளடைவில் கலையரங்கம் பயனற்ற நிலையில் மாறியது .
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படாத நிலையில் இருப்பதால், ஜன்னல், கதவுகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
இந்தக் கலையரங்கத்தின் உள்புறமானது மாடுகள், குதிரைகள், ஆடு உள்ளிட்ட விலங்குகளின் வாழிடமாகவும் காணப்படுகிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாராமாகவும் போதை பொருள்கள் விற்பனை செய்யும் இடமாகவும் , திறந்தவெளி கழிப்பறையாகவும், மது அருந்துவோரின் வாழிவிடமாகவும் மாறிவருகிறது.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமாக இருப்பதால், பெண்கள் அப்பகுதியின் வழியே சென்று வர இயலாத சூழலும் நிலவுகிறது.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. பின் அந்தப் பணியும் நிதி பற்றாக்குறையின் காரணமாக பாதியில் விடப்பட்டுள்ளது. இந்தக் கலையரங்கத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மணநாளில் படுகாயமடைந்த பெண் - எந்த எதிர்பார்ப்புமின்றி ஏற்றுக்கொண்ட மணமகன்!