ETV Bharat / state

துப்பாக்கியுடன் திரிந்த மூன்று பேர் அதிரடி கைது; நடந்தது என்ன?

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Aug 20, 2019, 6:40 AM IST

மூன்று பேர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கைத்துப்பாக்கியுடன் மூவர் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காந்திநகர் சென்ற காவல்துறையினர் கைத்துப்பாக்கி வைத்திருந்த ஒருவரைக் கைது செய்தனர். பின்னர், விசாரணையில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட நபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின் என தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த பிரகாஷ், சத்திரப்பட்டி வேலூரைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் வேடசந்தூர் குஜிலியம்பாரையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் டிரைவராக விபின் பணிபுரிந்து வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு சக்திவேல் மனைவியை அதே ஊரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தாக்கியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெகதீசனைத் தாக்க பிரகாஷ், செல்வராஜ் ஆகியோரை அழைத்துச் செல்ல விபின் இருவரையும் கூட்டிச் செல்ல ஒட்டன்சத்திரம் வந்த போது காவல்துறையிடம் பிடிபட்டது தெரியவந்தது.

கைத்துப்பாக்கியுடன் சுற்றிய மூன்று பேர் கைது...

இதையடுத்து, மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து மூன்று அறிவாள்கள், கைத்துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Intro:திண்டுக்கல்.

ஒட்டன்சத்திரம் செய்தி

ஒட்டன்சத்திரம் பகுதியில் கைத்துப்பாக்கியுடன் சுற்றிய மூன்று பேர் கைது.Body:திண்டுக்கல். 19.08.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் பகுதியில் கைத்துப்பாக்கியுடன் சுற்றிய மூன்று பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கைத்துப்பாக்கியுடன் மூவர் சுற்றித் திரிவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் காந்திநகர் செல்லும் ரோட்டில் வேகமாக ஓடிய இளைஞர் வைத்திருந்த கைத்துப்பாக்கி தவறி கீழே விழுந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலிசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட நபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின் என்பவர் ஆவார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சத்திரப்பட்டி வேலூரைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்ததில் வேடசந்தூர் குஜிலியம்பாரையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் விபின் என்பவன் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு சக்திவேல் மனைவியை அதே ஊரைச் சேர்ந்த ஜெகதீசன் தாக்கியதாகவும் இதை விபினிடம் சக்திவேல் கூற மேலும் இருவரை அழைத்து வந்து ஜெகதீசனை தாக்கலாம் என்று விபின் கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து பிரகாஷ், செல்வராஜ் ஆகியோரை கூட்டிச் செல்ல ஒட்டன்சத்திரம் வந்ததாக விபின் தெரிவித்துள்ளான். இவர்கள் மூன்று பேரையும் போலிசார் கைது செய்து ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து மூன்று அறிவாள்கள் மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.Conclusion:திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் கைத்துப்பாக்கியுடன் சுற்றிய மூன்று பேர் கைது

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.