ETV Bharat / state

Onam Festival: ஓணம் பண்டிகை முன்னிட்டு பூக்கள் விற்பனை அமோகம் -திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி! - Onam festival flower rate

Dindigul Flower market: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து 6 டன் மல்லிகை பூக்கள் கேரளா மாநிலத்திற்கு அனுப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Dindigul news
நிலக்கோட்டை பூ மார்க்கெட்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 4:47 PM IST

நிலக்கோட்டை பூ மார்க்கெட்

திண்டுக்கல்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து, ஒரே நாளில் 6 டன் மல்லிகை பூக்கள் கேரளா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகையானது வரும் 29-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான 10-வது நாள் மக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், காய்கறிகள், பழங்கள் படைத்தும் வழிபாடு செய்வார்கள். அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து கொண்டாடப்படும் திருவிழாவாக ஓணம் பண்டிகை விளங்குகிறது.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட் தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய பூ மார்க்கெட் ஆக விளங்குகிறது. நிலக்கோட்டை பகுதியை சுற்றிலும் அனைத்து இடங்களிலும் பூக்கள் சாகுபடி பிரதானமாக உள்ளது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் பூக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் மீண்டும் நிறவெறித் தாக்குதல்? - புளோரிடாவில் 3 கறுப்பின மக்கள் சுட்டுக் கொலை!

இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு அத்தப்பூ கோலம் இடுவதற்கு என பல்வேறு அலங்கார பூக்கள் நாள்தோறும் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், ஓணம் பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை மேலும் கூடுதலாக அதிகரித்து உள்ளது.

மேலும், நிலக்கோட்டை மலர் சந்தையில் மல்லிகை பூ வரத்து அதிகரித்து காணப்பட்டது. விவசாயிகள் கிலோ கணக்கில் மல்லிகை பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்த நிலையில், ஒரு கிலோ மல்லிகை பூ 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனையானது.

காலை 8 மணியிலிருந்து 10 மணி வரைக்குள் சுமார் 6 டன் மல்லிகை பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டு லாரியில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து, முல்லை, ஜாதி, கனகாம்பரம் உள்ளிட்ட அனைத்து பூக்களும் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு, கேரளாவிற்கு அனுப்பப்பட்டது.

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு அதிக அளவு பூக்கள் வரத்து இருந்த நிலையிலும், மல்லிகை பூக்களுக்கு நல்ல விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இரண்டு நாட்களுக்கு பூக்களின் வரத்து அதிகரித்து காணப்படும் என்றும் பூக்களின் விலை தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி! மீண்டும் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.