கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்திலும் காவல்துறையினர், மருத்துவ துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் கண்காணிப்பாளர் ராஜமுரளி, காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், ஊர் காவல் படை மற்றும் காவலர்களுக்கு தனது சொந்த செலவில் தினமும் மதிய உணவுகள் தயாரித்து கடந்த 15 நாட்களாக இலவசமாக வழங்கி வருகிறார்.
காவல் துறையினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு உணவு அளித்து வரும் காவல் ஆய்வாளர் ராஜ முரளிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆதரவற்ற தெரு நாய்களுக்கு உணவு - மதுரை மாவட்ட ஆட்சியர்.!