திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தற்போது கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் பகல் முதலே குளிர் நிலவி வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. வார விடுமுறை, தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் நகர்ப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிலுவை வடிவிலான பூக்கள் பூத்துள்ளன.
மேலும் ஆண்டுக்கு ஒருமுறை டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்கும் விதமாக இந்தப் பூக்கள் பூப்பதால் சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகைப் பூக்கள் இளம்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
இதையும் படிங்க:
‘உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்’ - அமைச்சர் பாண்டியராஜன்!