ETV Bharat / state

கஞ்சா வியாபாரியை காவல் நிலையம் அழைத்துச் செல்லும்போது விபத்தில் பலி - Killed in accident When taken to the police station Cannabis dealer in dindigul

வேடசந்தூர் அருகே கஞ்சா வியாபாரியை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் செல்லும்போது தப்பிக்க முயன்றதில் எதிர்பாராத விதமாக வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தார்.

விபத்தில் பலி
விபத்தில் பலி
author img

By

Published : Jun 5, 2022, 7:39 PM IST

திண்டுக்கல்: தேனி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விடுதலை பட்டி என்ற கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரும் இவரது மனைவியும் தனியார் நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். இவர் சைட் பிஸ்னஸாக தேனி பகுதியில் கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதியில் நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியானது காவல்துறையினருக்கு ரகசியமாக தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணி செய்து வந்த தனிப்பிரிவு காவலர் மற்றும் காவல்நிலைய எழுத்தாளர் குற்றவாளியைக் கைது செய்து அழைத்து வர விரைந்துள்ளார். அப்போது குற்றவாளியிடம் 15-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க அவரை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்கள்.

விபத்தில் பலி

சரியாக அரவக்குறிச்சி தாலுகா மஞ்சு வெள்ளி ஊராட்சி கடம்பன்குறிச்சி மற்றும் எல்லப்பட்டி என்ற இடத்தில் அவர்களது வாகனம் வந்துகொண்டிருந்தபோது திடீரென கஞ்சா வியாபாரி பொன்னுசாமி இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயற்சித்தார். அதே சமயத்தில் அந்த வழியாக தனியார் நூல் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் மோதியதில் கஞ்சா வியாபாரி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

விபத்தில் பலி
விபத்தில் பலி

விபத்து நடந்த இடம் சரியாக திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மையப்பகுதியில் உள்ளது. அதனால் பலியான கஞ்சா வியாபாரியின் சடலத்தை மீட்டு போலீசார் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்து வந்த குற்றவாளியை கையும் களவுமாக பிடித்து அழைத்து வரும் போது உயிரிழந்த நிலையில் கேள்வியாக பாதுகாப்பற்ற நிலையில் அழைத்து வந்ததாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் கரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அரவக்குறிச்சி வட்டாட்சியர் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விசாரணை செய்து வந்ததை தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஆர்.கோம்பையைச் சேர்ந்த விஜயகுமாரை கரூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபர் - சிசிடிவி மூலம் குற்றவாளிக்கு போலீஸ் வலை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.