ETV Bharat / state

குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் - திணறும் வனத்துறை!

கொடைக்கானல் பேத்துப்பாறை குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட முயன்ற வனத்துறையினரை யானை திருப்பித் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 28, 2023, 9:21 PM IST

குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை அட்டகாசம்

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் பல்வேறு மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு, கீழ்மலை கிராமங்களான பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சு வீடு, தாண்டிக்குடி உள்ளிட்டப் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. இங்கு வாழை, காப்பி, அவரை, கேரட், பலா உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இங்கு விவசாயம் செய்யும் மக்களுக்கு பெரும் இடையூறாக வன விலங்குகள் இருந்து வருகிறது. குறிப்பாக காட்டெருமை, பன்றி, சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது. அண்மைக்காலமாக யானைக்கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால், மக்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதனால், விவசாயம் முற்றிலும் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள பேத்துப்பாறை குடியிருப்புப் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை முகாமிட்டு இருந்தது. தொடர்ந்து யானையைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஒற்றைக்காட்டு யானையை விரட்டச்சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஒற்றைக்காட்டு யானையை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறினர்.

தொடர்ந்து விரட்ட முயன்ற வனத்துறையினரை ஒற்றைக்காட்டு யானை விரட்டியதால் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானையைக் கண்காணித்து விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: viral video: நடுரோட்டில் ஆக்ரோஷமாக மோதிய யானைகள்.. வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.