திண்டுக்கல் மாநகராட்சியிலுள்ள 48 வார்டுகளில் திமுக அதன் கூட்டணிக் கட்சிகள் 37 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை தனது வசமாக்கிக் கொண்டது. இதேபோல 3 நகராட்சிகளில் பழனி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக 20, அதிமுக 8, காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், சுயேச்சை ஆகியோர் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
பழனி நகராட்சியையும், கொடைக்கானல் நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் திமுக 16, அதிமுக 4, மதிமுக 1, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளன. அதிக வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக கொடைக்கானல் நகராட்சியும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 17, காங்கிரஸ்-1 வார்டுகளில் வெற்றி பெற்று 3 நகராட்சிகளையும் தனது வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது.
அதேபோல் அய்யலூர், எரியோடு, பாளையம், வேடசந்தூர், அகரம், தாடிக்கொம்பு, நத்தம், சின்னாளப்பட்டி, அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி, சித்தையன்கோட்டை, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், கீரனூர், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பண்ணைக்காடு, வடமதுரை பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.
வத்தலகுண்டு பேரூராட்சியில் திமுக கூட்டணி பதினெட்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளது. பழனி நகராட்சியில் 23 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி தபால் ஓட்டு மூலம் பெற்ற ஒரு ஓட்டின் மூலம் வெற்றி பெற்றார். அதேபோல, நத்தம் 4ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கா. ராமு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமமூர்த்தியை விட ஒரு வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் வெற்றி கொண்டாட்டம்: கூரை வீடு எரிந்து சேதம்