திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரட்டூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த அஜீத்குமார்(21) என்பவர் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அந்த சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து நிலக்கோட்டை சமூக நல விரிவாக்க அலுவலர் செல்வம் விளாம்பட்டி காவல் ஆய்வாளர் வனிதாவிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்படி விவசாயி அஜீத்குமாரை காவல்துறையினர் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.