தரை தளங்களில் மட்டும் விளையக்கூடிய மக்காச்சோளம் தற்போது மலைப்பகுதியிலும் விளையத் தொடங்கியுள்ளது. மக்காச்சோளம் வெப்பமான காலத்தில் மட்டும் விளையும். ஆனால் தற்போது குளிர் நிறைந்த கொடைக்கானலிலும் மக்காச்சோளம் விளைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஆசீர் மோகன். இவர் தனது வீட்டுத் தோட்டத்தில், ஆன்லைன் மூலமாக மக்காச்சோள விதைகளை வாங்கி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்துள்ளார்.
அவர் நடவு செய்த மக்காச்சோளம் தற்போது நல்ல விளைச்சலைக் கண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த மக்காச்சோளம் பல்வேறு வண்ணங்களில் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானவில் நிறைந்த வண்ணங்கள், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் மக்காச்சோளம் உள்ளது. மலைப் பகுதியில் சவாலாக இருந்த மக்காச்சோள விவசாயம் தற்போது வழக்கறிஞர் ஆசீர் மோகனால் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் பொதுவாக விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வரும் சூழ்நிலையில் இதுபோன்ற புது வித முயற்சிகளால் விவசாயம் மற்றும் சுற்றுலாவையும் மேம்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது .
மேலும் இதேபோன்று இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பு கேரட் விளைவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற புதுவித முயற்சியால் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என்கிறார் வழக்கறிஞர்.
இதையும் படிங்க: தனி ஒருத்தி சங்கரி: குப்பை மேட்டை கடல்போல் மாற்றிய சிங்கப் பெண்!