திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளது.
இங்குள்ள அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில் ரோஜா தோட்டம் அமைக்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைத்த இந்த பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று பார்க்கும் வகையில் இருந்தது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அவர்களின் வசதிக்கு ஏற்ப பேட்டரி கார் வசதி தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் வயதானவர்கள் கூட இனி எளிதில் ரோஜா தோட்டத்தைக் குறைந்த நேரத்தில் பார்த்து ரசிக்கலாம் என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் பயனற்று கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள் - நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!