ETV Bharat / state

காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் - இளைஞரை மிரட்டியதாக பெண் கைது! - today latest news in dindigul

Facebook cheated woman arrested: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் முகநூல் மூலம் நட்பாகப் பழகி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக போஸ்டர் ஒட்டிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook cheated woman arrested
முகநூல் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக போஸ்டர் ஒட்டிய பெண் உட்பட 3 பேர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 2:58 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருவையா. இவர் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ ஏற்றுமதி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரோஷன் பட்டதாரி இளைஞர் ஆவர். ரோஷனுக்கு பொள்ளாச்சி அருகே வடக்கு பாளையத்தைச் சேர்ந்த உஷா என்ற பெண் முகநூல் மூலம் அறிமுகமானார்.

இந்த நட்பு பல மாதங்கள் முகநூல் உரையாடல் மூலம் தொடர்ந்து தங்களது போன் நம்பரையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் தனது நட்பை உஷா காதலாக மாற்றுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளார். அவரின் போக்கு பிடிக்காமல் ரோஷன் தனது முகநூல் பக்கத்தை முடக்கி விட்டு போன் நம்பரையும் பிளாக் செய்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து நட்பைத் தொடர முடியாத உஷா பல்வேறு செல்போன் நம்பர்களில் இருந்து பேசி ரோசனை தொடர்ந்து தன்னை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இறுதியில் பொள்ளாச்சியில் இருந்து தனது உறவினர் கிருஷ்ணவேணி என்பவர் உடன் கொங்கப்பட்டிக்கு வந்துள்ளார்.

அந்த கிராமத்தில் இருந்த சிவஞானம் என்பவரிடம் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக சொல்லி பிரச்சினையைப் பேசி தீர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார். அவர் உஷாவிற்கு உதவ முன்வந்த நிலையில் திடீரென கொங்கபட்டி பகுதி முழுவதும் "நிலக்கோட்டையில் பூக்கடை வைத்திருக்கும் கொங்கு பட்டியைச் சேர்ந்த குருவையா மகன் ரோஷன் என்பவர் என்னைக் காதலித்து ஏமாற்றி விட்டார்" என்ற வாசகங்களுடன் ரோஷனும் உஷாவும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உஷா தன் நண்பர்களுடன் இணைந்து குருவையாவை வழிமறித்து ரோஷன் விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல் இருக்க ரூபாய் 5 லட்சம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் குருவையா, தன்னை பணம் கேட்டு மிரட்டியதாகவும் தன் மகன் மீது அவதூறு போஸ்டர் ஒட்டியதாகவும் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குருவையா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நிலக்கோட்டை போலீசார், காதலித்து ஏமாற்றி விட்டதாக போஸ்டர் ஒட்டி பணம் கேட்டு மிரட்டிய பொள்ளாச்சி உஷா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணவேணி, சிவஞானம் உட்பட மூன்று பேரை கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வகுப்பறை முன்பு மலம் கழித்த சமூக விரோதிகள்..! உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பெற்றோர்கள் கோரிக்கை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.