திண்டுக்கல் மாவட்டம் பழனி திருவள்ளுவர் சாலையில் வசித்து வருபவர் முத்துக்குமாரசாமி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிகாக சென்னைக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர், மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த முத்துக்குமாரசாமி, கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது, 200 ஆண்டுகள் பழமையான வைரம், மரகதம் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தகவவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் , தடயவியல் நிபுணர்கள் உதவிகளுடன் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கூறுகையில், " வீட்டில் 200 ஆண்டுகள் பழமையான வைரம், மரகதம் உள்ளிட்ட தங்க நகைகள் 50 சவரனுக்கும் மேல் வைத்திருந்தோம். இதன் மதிப்பு பல லட்சங்களை தாண்டும், என்றார்.
வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியின் முன்னோர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கல்போது கிராமத்தின் ஜமீன் குடும்பத்தினரின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவு: பெண் அடித்துக் கொலை