தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (50). இவரது மனைவி அமரா. இவர்களுக்கு சுரேஷ் (27) என்ற மகன் உள்ளார். தனது மகனுக்கு பெண் பார்க்க தந்தை முருகன், மகன் சுரேஷ், வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் சென்றனர்.
அப்போது, கோட்டூர் நெடுஞ்சாலையில் எதிரே வந்த வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் முருகன், மாரிமுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சுரேஷ் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உயிரிழந்த முருகன், மாரிமுத்துவின் உடல் உடற்கூராய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.