தர்மபுரி: தமிழக முன்னால் உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் செய்தியாளா்களை சந்தித்தார். அவர் பேசியது, தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது பன்வரிலால் புரோகித், துணை வேந்தர் நியமனத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வாங்குகிறார்கள் என அப்போதே ஒரு விழாவில் பேசினார். நான் அப்பொழுதே இவரது கருத்துக்கு, மறுப்பு தெரிவித்து, விளக்கம் கொடுத்துள்ளேன்.
ஒரு துணை வேந்தரை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானவுடன், தேடுதல் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழு 10 பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்புகிறது இந்த 10 பேரில் மூன்று பேரை தேர்வு செய்து அந்த மூன்று பேரிடமும் ஆளுநர் நேர்காணல் நடத்துகிறார்.
இதில் அரசுக்கோ, முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தொடர்பு இல்லை. இந்த நிலையில் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு 40 கோடி முதல் 50 கோடி வரை வாங்கப்படுகிறது என்று பன்வாரிலால் புரோகித் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் துணை வேந்தர்களை நியமிக்கின்ற வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை என்பதால் தமிழகத்தின் மீது குறை கூறுவது ஏற்புடையதல்ல. துணைவேந்தர் நியமனம் என்பது முழுவதும் ஆளுநரை சார்ந்தது அதில் எந்தவித தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு ஆளுநரை சார்ந்தது.
இதில் ஆளுகின்ற அரசுக்கோ முதலமைச்சர் கல்வித்துறை அமைச்சருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. இந்த நியமனத்தில் முதல்வருக்கோ அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. முழுக்க முழுக்க ஆளுநரையைச் சார்ந்தது ஒருவேளை அவ்வாறு பணம் கை மாறி இருந்தால் அது ஆளுநரையே சாரும்.
மேலும் 22 துணை வேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன் என்று அவர் சொல்கிறார். இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்து இருந்தால் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். அவர் கூறுவது தவறான தகவல் தான் என முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நகையை மீட்டுத் தர ரூ.3000 லஞ்சம்! - வீடியோவில் சிக்கிய எஸ்.ஐ.