தர்மபுரி: கர்நாடக மாநிலம் காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழையாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (அக்.18) காலை தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கும் தொடர்ந்து தடை நீடிப்பதால், ஒகேனக்கல் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்து வரும் பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்கள், மசாஜ் தொழிலாளர்கள் ஒகேனக்கலுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து ஆராய, மாவட்ட நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் ஒகேனக்கல் பகுதியில் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை வேகமாக முடிக்க அறிவுறுத்தினார். விரைவில் ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:’குஷ்பூ இணைந்ததால் பாஜகவிற்கு புதிய எழுச்சி’: முன்னாள் ஐஆர்எஸ் சரவணன்