தர்மபுரி: மாரண்டஅள்ளி அருகே உள்ள கெண்டையனஹள்ளி கிராமத்தில் மின்சார பற்றாக்குடியால் வீடு மற்றும் விவசாய பம்பு செட்டுகளுக்கு போதிய மின்னழுத்தம் கிடைக்காமல் மின் மோட்டார், மிக்ஸி கிரைண்டர் போன்றவை அடிக்கடி பழுதாகி வந்தன.
மக்களின் பிரச்சனை தீர்க்க மாரண்டஅள்ளி மின்வாரியம் சார்பில் மஞ்சு மாரியம்மன் கோவில் அருகில் புதியதாக 64 கேவி இம்ப்ரூவ்மெண்ட் ட்ரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டது. டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு சில நாட்களே ஆன நிலையில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டு காலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
அப்போது புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மா் அருகே சென்று பொதுமக்கள் பார்த்துள்ளனர். அப்போது திருட்டு கும்பல் மின்சாரத்தைத் துண்டித்து விட்டு டிரான்ஸ்பார்மரில் இருந்த செம்பு காயில்களை திருடிச் சென்றுள்ளனர். கிராம மக்கள் திருட்டு சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி மின்வாரிய அலுவலகத்திற்குப் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் ட்ரான்ஸ்பார்மரை வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து டிரான்ஸ்பார்மரை சோதித்தபோது 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின் கம்பிகள் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திருட்டு குறித்து மாரண்டஅள்ளி உதவிப் பொறியாளர் அருணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் குறித்து மாரண்டஅள்ளி துணை ஆய்வாளா் வெங்கடேசன் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் - வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கம்