தருமபுரி மாவட்டம் இராமகொண்ட அள்ளி ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் நேற்று (ஜன.21) இரவு ஏரியூர்-மேச்சேரி சாலையில் பொதுமக்கள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்!