தருமபுரி நகரப்பகுதியில் 8 அரசு மதுபானக் கடைகள், மாவட்டம் முழுவதும் 52 மதுபானக் கடைகள் என மொத்தம் 60 அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இதில் ஒரு சில கடைகள் பார் வசதியுடன் இயங்கிவருகிறது. அரசு மதுபானக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.1.30 கோடி முதல் ரூ.1.40 கோடி வரை இருந்துவந்தது.
7 கோடிக்கு மது விற்பனை
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த இரண்டு நாள்களில் (ஜன.15,17) மட்டும் தருமபுரி மாவட்டத்தில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. பொங்கல் பண்டிகை நாள்களில் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்துக் கடைகளிலும் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
பொங்கல் பண்டிகை நாளில் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளில் ரூ.3 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும் நேற்று காணும் பொங்கல் என்பதால் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் கூடுதலாக ரூ.4 கோடிக்கு மது விற்பனை ஆகியது.
மதுப்பாட்டில்களை வாங்குவதற்கு மது அருந்துபவர்கள் போட்டிபோட்டுக்கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை ரூ.1.5 கோடிக்கு அதிகமாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுபோதையில் பெண் மீது மோதிவிட்டு தப்ப முயன்ற ‘காவல்’ குடிமகன்!