தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள், வெளியூர் செல்லும் பயணிகள் வருகையால் நகரப் பேருந்து நிலையம், புறநகர்ப் பேருந்து நிலையம் முழுவதும் பொதுமக்கள் குவிந்து காணப்படுகின்றனர்.
ஆறுமுக ஆசாரித் தெரு, சின்னசாமி நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் துணிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து, அங்குள்ள பட்டாசுக் கடைகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை தங்களுக்குத் தேவையான பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வாங்கி வருகின்றனர்.
இதையடுத்து, தீபாவளி பண்டிகை சமயம் என்பதால் திருட்டு போன்ற அசம்பாதவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்க தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் பேருந்து நிலையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி கண்காணித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு மல்லிகைப் பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை!